தேவையான பொருட்கள்:
வாழைக்காய் – 1,
தேங்காய் துருவல் – 3 ஸ்பூன்,
சோம்பு – 1 டீஸ்பூன்,
கசகசா – 1 டீஸ்பூன்,
தனியா – 1/2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 4,
பூண்டு – 3 பல்,
கறிவேப்பிலை – சிறிது,
கடுகு – 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – 2 ஸ்பூன்.
செய்முறை:
வாழைக்காயை தோல் சீவி, வில்லைகளாக நறுக்கி, தண்ணீரில் போட்டு வைக்கவும்.
தேங்காய் துருவல், சோம்பு, கசகசா, தனியா, காய்ந்த மிளகாய், பூண்டு அனைத்தையும் மிக்ஸியில் போட்டு, கரகரப்பாக அரைக்கவும்.
வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, நறுக்கிய வாழைக்காய், கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
அரைத்த மசாலாவை கரைத்து ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு போட்டு வேக விடவும்.
வாழைக்காய் வெந்து தண்ணீர் வற்றியவுடன், 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு 1 நிமிடம் கிளறி இறக்கவும்.