டில்லியில் நடந்த, சி.பி.ஐ., பொன்விழா நிகழ்ச்சியில், நேற்று முன்தினம், சி.பி.ஐ., இயக்குனர் ரஞ்சித் சின்கா பேசும் போது, ‘ஓட்டல்களில், சூதாட்ட விடுதிகள் செயல்படுகின்றன. சில மாநிலங்களில், லாட்டரிச் சீட்டுகளுக்கும், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சூதாட்டம், பாலியல் பலாத்காரம் போன்றது; அதை, சட்டத்தால், தடுக்க முடியா விட்டால், அனுபவித்து மகிழ வேண்டும்’ என்றார். அவரின் பேச்சு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெண்கள் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், கடும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து, சி.பி.ஐ., இயக்குனர், ரஞ்சித் சின்கா, தன் பேச்சுக்கு, நேற்று முன்தினமே, இரண்டு முறை வருத்தம் தெரிவித்தார்.
மூன்றாவது முறையாக, நேற்று அவர் கூறியது: ” பெண்கள் மீது, அதிக மதிப்பும், மரியாதையும், எனக்கு உண்டு. கிரிக்கெட் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்பது, என் தனிப்பட்ட கருத்து. இதை வலியுறுத்தும் விதமாகவே பேசினேன். ஆனால், பாலியல் பலாத்காரத்தை அனுபவிக்க வேண்டும் என, நான் கூறியதாக, செய்திகள் வெளியாகி விட்டது. அந்த அர்த்தத்தில், எதுவும் கூறவில்லை. நான் பேசிய, சில வார்த்தைகள், யாரையாவது காயப்படுத்தியிருந்தால், அதற்காக, மன்னிப்பு கோருகிறேன்”.
சி.பி.ஐ., இயக்குனர் பேச்சுக்கு சில தலைவர்களின் கருத்து:
ஸ்மிருதி இரானி,பா.ஜ., துணை தலைவர்:
சி.பி.ஐ., இயக்குனர் என்ற, மிகப் பெரிய பொறுப்பில் இருக்கும் அதிகாரி, இதுபோன்ற, அருவருக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்தியிருப்பது, அதிர்ச்சி அளிக்கிறது. அவரின் பேச்சு, பலரையும் காயப்படுத்தி உள்ளது
பிருந்தா கராத்,மார்க்சிஸ்ட் எம்.பி.,:
சி.பி.ஐ., இயக்குனராக இருப்பவரே, பாலியல் பலாத்காரத்தை ஆதரித்து பேசினால், அது, நாட்டு மக்களுக்கு, தவறான தகவல்களை தந்து விடும். சி.பி.ஐ., இயக்குனர் பதவியில் நீடிப்பதற்கு, அவருக்கு இனியும், உரிமை இல்லை.
பிருந்தா கராத்,மார்க்சிஸ்ட் எம்.பி.,