மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தனது 200வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் சதத்தை தவறவிட்டார். இன்றைய ஆட்டத்தில் அரை சதம் அடித்த அவர் 74 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். இன்றைய ஆட்டத்தில் சதம் அடிக்க வேண்டும் என்று வான்கடே முழுவதும் ரசிகர்கள் சச்சின், சச்சின் என உற்சாகப் படுத்தினர். அவர் சந்திக்கும் ஒவ்வொரு பந்தையும் ரசிகர்கள் தீபாவளி கர ஒலி எழுப்பி ஊக்கம் கொடுத்து வந்தனர். இந்நிலையில் அவர் 74 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் 38 ரன்களுடனும் களத்தில் இருந்த சச்சின் இன்று அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 118 பந்துகளுக்கு 74 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா 1 -0 என முன்னிலை வகிக்க, கடைசி டெஸ்ட் மும்பை வாங்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது. முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்தது. இதன் பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஓஜா மற்றும் அஸ்வினின் சிறப்பான பந்துவீச்சால் 182 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்வை தொடங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்திருந்தது. சச்சின் 38 ரன்களுடனும், புஜரா 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதனையடுத்து இன்றைய ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி சச்சினின் சிறப்பான ஆட்டத்தால் முன்னிலை பெற்று தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டது. சற்று முன் வரை இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. கோஹ்லி 36 ரன்களுடனும், புஜரா 85 ரன்களுடனும் களத்தில் நின்று ஆடி வருகின்றனர். சச்சின் 74 ரன்களில் ஆட்டமிழந்தார்.