வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து நாகை அருகே நேற்று மாலை கரையை கடந்தது. இதனால் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் பொழியும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி சென்னையில் இன்றும் இடியுடன் கூடிய பலத்த மழை பொழிய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.