ராஜபாளையம் அருகே ஆம்னி பேருந்து கிணற்றுக்குள் விழுந்த விபத்தில் பஸ் டிரைவர் உள்பட 3 பேர் பலியானார்கள். 9 பேர் காயம் அடைந்தனர்.
கோவையில் இருந்து தென்காசி அருகே உள்ள ஆலங்குளத்திற்கு நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு தனியார் ஆம்னி பேருந்து புறப்பட்டு சென்றது. பேருந்தில் 25 பயணிகள் இருந்தனர். பேருந்தை மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த சின்னச்சாமி ஓட்டினார்.
பேருந்து அதிகாலை 5.30 மணி அளவில் ராஜபாளையத்தை கடந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள வளைவில் திரும்பியது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து ராயகிரியில் இருந்து ராஜபாளையம் நோக்கி வந்த அரசு டவுன் பஸ் மீது மோதியது. மோதிய வேகத்தில் ஆம்னி பேருந்து தேசிய நெடுஞ்சாலை அருகில் இருந்த 50 அடி ஆழ கிணற்றில் பாய்ந்தது.
இந்த விபத்தில் பேருந்து பாய்ந்த கிணற்றில் தற்போது 2 அடி உயரத்திற்கே தண்ணீர் உள்ளது. இல்லாவிடில் உயிர் சேதம் இன்னும் அதிகரித்திருக்கும்.