இளம்பெண் வக்கீல் புகார்! நீதிபதி வாக்குமூலம்!!

கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்காள தேசிய நீதித்துறை அறிவியல் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு சட்டக்கல்வி படித்து பட்டம் பெற்ற இளம்பெண் வக்கீல் ஒருவர், ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஒருவர் மீது சமீபத்தில் பாலியல் புகார் கூறினார். தான் அவரிடம் பயிற்சி பெற்றபோது, கடந்த ஆண்டு டிசம்பர் 24-ந் தேதி டெல்லி ஓட்டல் ஒன்றில் வைத்து தனக்கு அவர் பாலியல் தொல்லை தந்ததாக குற்றம் சாட்டினார். ஆனால் அந்த நீதிபதியின் பெயரை அவர் வெளியிடவில்லை.

நீதி வழங்கும் பொறுப்பில் இருந்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியே பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் எம்.எல். சர்மா என்ற வக்கீலும், அட்டார்னி ஜெனரல் ஜி.இ. வாஹன்வதியும் முறையிட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, எச்.எல்.டட்டு, ரஞ்சனா தேசாய் ஆகியோரை கொண்ட நீதி விசாரணை குழுவை தலைமை நீதிபதி பி. சதாசிவம் அமைத்து கடந்த 12-ந் தேதி உத்தரவிட்டார்.

ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. கங்குலியின் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது. நீதிபதிகள் குழு தனது அறிக்கையை தலைமை நீதிபதியிடம் நவம்பர் 28-ந் தேதி சமர்ப்பித்தது.
ஆனால் தன் மீது இளம்பெண் வக்கீல் கூறிய புகாரை நீதிபதி ஏ.கே.கங்குலி திட்டவட்டமாக மறுத்தார்.

Leave a Reply