உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் இருந்து நேற்று மாலை அலகாபாத்துக்கு ‘ஹரித்வார் எக்ஸ்பிரஸ்’ புறப்பட்டு சென்றது. இந்த ரெயில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவின் புறநகர்ப் பகுதியான நிகோகா அருகில் தடம் புரண்டது. பின்னர் தடம்புரண்ட பெட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டு, விரைவில் போக்குவரத்து சரி செய்யப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.