செங்கல்பட்டில் இருந்து தாம்பரத்துக்கு இன்று காலை 10.30 மணிக்கு மின்சார ரெயில் வந்தது. கிழக்கு–மேற்கு தாம்பரத்தை இணைக்கும் ரெயில்வே மேம்பாலத்தை கடந்து சென்ற சில நிமிட நேரத்தில் மேம்பாலம் அடியில் உள்ள மின்கம்பம் சரிந்து விழுந்தது. இதனால் மின்சார கம்பி அறுந்து விழுந்து மின்தடை ஏற்பட்டது. இதை அறிந்த ரெயில்வே ஊழியர்கள் மின் கம்பத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேரம் கடந்த பின்னரும் சரி செய்யும் பணி முடியவில்லை.இதனால் செங்கல்பட்டு–தாம்பரம் இடையெ ரெயில்வே சேவை பாதிக்கப்பட்டது. மின்கம்பம் சரிந்து விழுந்த சுரங்கப்பாதை வழியாக பொதுமக்கள் செல்வதுண்டு. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.