ஜெயலலிதா – ஜெகன்மோகன் ரெட்டி இன்று சந்திப்பு

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்துக்கு ஆதரவு கோரி முதல்வர் ஜெயலலிதாவை ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று சந்தித்துப் பேசுகிறார்.

ஆந்திர மாநிலத்தை பிரித்து தெலங்கானா மாநிலம் உருவாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்தைப் பிரிக்கக்கூடாது என்று வலியுறுத்தி, ஆந்திராவைச் சேர்ந்த பொதுமக்களும், பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியும், ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி வருகிறார். பல மாநில முதல்வர்களுக்க கடிதம் அனுப்பினார்.

இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதாவை ஜெகன்மோகன் ரெட்டி தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்துப் பேசுகிறார்.

Leave a Reply