அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சிரஞ்சீவி

ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க மத்திய அமைச்சரவை நேற்றுமுன்தினம் ஒப்புதல் அளித்தது. இதுதொடர்பான வரைவு ஆந்திரா மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இனிமேல், இம்மசோதா, ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் ஆந்திர சட்டசபையின் ஒப்புதலுக்காக அதை அனுப்பி வைப்பார். இந்நிலையில், தெலுங்கானா பிரிவினை காரணமாக அதிருப்தி அடைந்த, சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த மத்திய சுற்றுலாத்துறை அமைச்சரும், நடிகருமான சிரஞ்சீவி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பி வைத்தார்.

Leave a Reply