பெங்களூரு ஏ.டி.எம் மையத்தில் பெண் வங்கி அதிகாரியை தாக்கி பணம் மற்றும் செல்போனை கொள்ளையடித்து சென்ற நபரை கர்நாடக மாநிலம் தும்கூரில் கைது செய்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் சந்தேகிக்கப்படும் அந்த நபர் தொடர்பான வீடியோ பதிவுகளை அதிகாரிகள் போலீசாரிடம் அளித்திருந்தனர். இதன் அடிப்படையில் நடத்திய சோதனையில் ஏ.டி.எம்மில் வங்கி அதிகாரியை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வீடியோ காட்சியில் காணப்பட்ட அதே பையுடன் அந்த நபர் தென்பட்டதாக தெரிகிறது. விசாரணைக்காக அந்த நபர் பெங்களூருவிற்கு கொண்டு வரப்படுவதாகவும், போலீசார் கூறினார்.