மேஷம்
மேலோட்டமாக இல்லாமல் எதையும் ஆழ, அகலமாக சிந்திப்பவர்களே! உங்களின் ராசிநாதன் செவ்வாய் வலுவாக 6 – ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். முன்கோபம், வாக்குவாதங்களை தவிர்ப்பீர்கள். சகோதர வகையில் இருந்த சங்கடங்கள் நீங்கும். வீடு, மனை விற்பது, வாங்குவது எளிதாக முடியும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தூரத்து உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி தங்கும். ஆனால் ராகு, கேது, சனியின் போக்கு சரியில்லாததால் கணவன் – மனைவிக்குள் வீண் சந்தேகங்கள் மற்றும் பழைய கசப்பான சம்பவங்களால் அவ்வப்போது நிம்மதி குறையும். தலைச்சுற்றல் வரும். மனைவியின் ஆரோக்யம் பாதிக்கும். அரசியல்வாதிகளே! வீண் வரட்டு கௌரவத்திற்காக சேமிப்புகளை கரைத்துக் கொண்டிருக்காதீர்கள். கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். வியாபாரத்தில் கூட்டுத் தொழில் செய்பவர்களுக்குள் கருத்து மோதல் வரும். உத்தியோகத்தில் வேலைச்சுமையும், சின்ன சின்ன நெருக்கடிகளும் வந்து நீங்கும். எதிர்பார்த்தவைகளில் ஒரு சில நிறைவேறும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 16, 17, 22 அதிர்ஷ்ட எண்கள் : 2, 6 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, பிஸ்தாபச்சை அதிர்ஷ்ட திசை : தெற்கு
ரிஷபம்
கலங்கி வருபவர்களுக்கு கலங்கரை விளக்கமாய் இருப்பவர்களே! ராஜ கிரகங்களான குரு, சுக்ரன், சனி சாதகமாக இருப்பதால் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்து செயல்படத் தொடங்குவார்கள். உயர்ரக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். இங்கிதமாகவும், இதமாகவும் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். வீடு, மனை வாங்குவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வாகனம் புதிதாக வாங்குவீர்கள். பழைய பிரச்னைகள் தீரும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். தந்தைவழி சொத்துகள் வந்து சேரும். வழக்குகள் சாதகமாகும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். ஆனால் செவ்வாய் 5 – ம் வீட்டில் நிற்பதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். சகோதர வகையில் பிணக்குகள் வரும். தவிர்க்க முடியாத செலவுகள் அதிகமாகும். அரசியல்வாதிகளே! ஆதாரமின்றி எதிர்கட்சியினரை விமர்சிக்க வேண்டாம். கன்னிப் பெண்களே! பெற்றோர் பாசமழைப் பொழிவார்கள். வியாபாரத்தில் ஏற்றுமதி – இறக்குமதி வகைகளால் ஆதாயமடைவீர்கள். பங்குதாரரை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். நிதானத்தால் நெருக்கடிகளை நீந்திக் கடக்கும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 19, 20, 21 அதிர்ஷ்ட எண்கள் : 3, 8 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், இளம்சிவப்பு அதிர்ஷ்ட திசை : கிழக்கு
மிதுனம்
பகுத்தறிவும், பட்டறிவும் உள்ள நீங்கள், எதார்த்தமான முடிவுகள் எடுப்பதில் வல்லவர்கள். சுக்ரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடியும். மனஇறுக்கங்கள் நீங்கும். நட்பு வட்டம் விரியும். காது வலி, முதுகு வலியிலிருந்து விடுபடுவீர்கள். அழகு, இளமைத் திரும்பும். குருவின் போக்கு சரியில்லாததால் பணத்தட்டுப்பாடு இருக்கும். வேலைச்சுமை அதிகமாகும். சோர்வு, களைப்பு வரும். தூக்கம் கொஞ்சம் குறையும். யாரை நம்புவது, யாரை நம்பாமல் இருப்பது என்ற குழப்பங்களும், தடுமாற்றங்களும் வரும். சனியும், ராகுவும் சாதகமாக இல்லாததால் பழைய பிரச்னைகள், இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது வருத்தப்படுவீர்கள். செவ்வாய் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் சகோதரங்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். கோபத்தை குறைக்க வேண்டுமென்ற முடிவுக்கு வருவீர்கள். அரசியல்வாதிகளே! சகாக்களுடன் உரிமையாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். தாயாரை தவறாகப் புரிந்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. எதிர்த்த அதிகாரியின் மனசு மாறும். பேச்சை குறைத்து செயலில் வேகம் காட்ட வேண்டிய வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 16, 20, 22 அதிர்ஷ்ட எண்கள் : 5, 7 அதிர்ஷ்ட நிறங்கள் : வைலெட், மஞ்சள் அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
கடகம்
நினைத்ததை முடிக்கும் வரை நெருப்பாய் இருப்பவர்களே! செவ்வாய் 3 – ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் எத்தனைப் பிரச்னைகள் வந்தாலும் அதில் வெற்றி பெறுவீர்கள். பணவரவு எதிர்பார்த்த அளவிற்கு இல்லையென்றாலும் சிக்கல்களை சமாளிக்குமளவிற்கு பணம் வரும். சாதுர்யமாகப் பேசி சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். சகோதரங்கள் உறுதுணையாக இருப்பார்கள். சொத்துப் பிரச்னை சுமூகமாகும். வழக்கு சாதகமாகும். கணவன் – மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். ராகு சாதகமாக இருப்பதால் வாகனப் பழுதை சரி செய்வீர்கள். புதன் சாதகமாக இல்லாததால் உறவினர், நண்பர்கள் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டம் உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்புகளை ஒப்படைக்கும். கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள். பங்குதாரர்களின் போக்கு அதிருப்தியை தரும். உத்தியோகத்தில் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். வி. ஐ. பிகளால் இனம் கண்டறியப்படும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 16, 17, 19 அதிர்ஷ்ட எண்கள் : 1, 7 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ் பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
சிம்மம்
தொலைநோக்குச் சிந்தனை அதிகம் உள்ளவர்களே! புதன் சாதகமாக இருப்பதால் உங்கள் செயலில் வேகம் கூடும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பதவிகள் தேடி வரும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். மகளுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். அரசால் அனுகூலம் உண்டு. விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். வேற்றுமொழிப் பேசுபவர்கள், மாற்று மதத்தவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். சனியும், ராகுவும் 3 – ம் வீட்டில் நீடிப்பதால் எதிர்ப்புகள் அடங்கும். உடல் நலம் சீராகும். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்தவர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். செவ்வாயின் போக்கு சரியில்லாததால் முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். யாரையும் எடுத்தெறிந்துப் பேச வேண்டாம். சகோதர வகையில் பிரச்னைகள் வெடிக்கும். வீடு, மனை வாங்குவது விற்பதில் சிக்கல்கள் வந்துச் செல்லும். அரசியல்வாதிகளே! சகாக்களைப் பற்றிக் குறைக் கூற வேண்டாம். கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். வியாபாரம் செழிக்கும். சிலர் சொந்த இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்களின் புது முயற்சிகளை பாராட்டுவார்கள். சிக்கனமும், சகிப்புத் தன்மையும் தேவைப்படும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 16, 18, 20 அதிர்ஷ்ட எண்கள் : 2, 5 அதிர்ஷ்ட நிறங்கள் : மயில்நீலம், வெள்ளை அதிர்ஷ்ட திசை : மேற்கு
கன்னி
கலகலப்பாகவும், கறாராகவும் பேசுபவர்களே! சூரியனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பிரச்னைகளை சமயோஜிதமாக சமாளிப்பீர்கள். வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் கட்டுவீர்கள். எதிர்பார்த்த தொகை வராவிட்டாலும் எதிர்பாராத வகையில் பணம் வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். தூரத்து சொந்தங்கள் தேடி வருவார்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். குருபகவான் ராசிக்கு 10 – ம் வீட்டில் நிற்பதால் கௌரவம் குறைந்துவிடுமோ என்ற அச்சம் வரும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த வாக்குறுதியும் தர வேண்டாம். வீண் டென்ஷன், மனைவிக்கு மருத்துவச் செலவுகள், வேனல் கட்டி வந்து நீங்கும். அரசு காரியங்கள் இழுபறியாகும். செவ்வாய் உங்கள் ராசிக்குள் நிற்பதால் தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். உடன்பிறந்தவர்களுடன் மனத்தாங்கல் வரும். சொத்து வாங்கும் போது தாய் பத்திரத்தை சரி பார்த்துக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் மதிப்பு, மரியாதைக் கூடும். கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் தள்ளி இருங்கள். பெற்றோரை அனுசரித்துப் போங்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அவர்கள் போக்கிலே விட்டுப் பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ராஜதந்திரத்தை உடைத்தெறிவீர்கள். ரகசியங்களை காக்க வேண்டிய வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 17, 19, 21 அதிர்ஷ்ட எண்கள் : 3, 9 அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, ஆலிவ்பச்சை அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட திசை : கிழக்கு
துலாம்
அகத்தூய்மையையும், புறத்தூய்மையையும் அதிகம் விரும்புபவர்களே! சூரியனும், புதனும் 3 – ம் வீட்டில் அமர்ந்ததால் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். அரசியலில் செல்வாக்குக் கூடும். பணப்பற்றாக்குறை நீங்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த உறவினர், நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள். சனியும், ராகுவும் உங்கள் ராசிக்குள்ளேயே நிற்பதால் எதிலும் ஒருவித பயம், பதட்டம் வந்துச் செல்லும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். ருசிக்காக சாப்பிடாமல், பசிக்காக சாப்பிடுவது நல்லது. எண்ணெய் பதார்த்தங்கள், லாகிரி, வஸ்துக்களை தவிர்ப்பது நல்லது. கூடாப்பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்க்கபாருங்கள். அரசியல்வாதிகளே! உங்களின் கோரிக்கையை மேலிடம் பரிசீலிக்கும். கன்னிப் பெண்களே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். வியாபாரத்தில் மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு அனுபவமில்லாத தொழிலில் முதலீடு செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள். வேலையாட்களாலும் பிரச்னைகள் உருவாகும். உத்தியோகத்தில் அவ்வப்போது பிடிப்பில்லாமல் போகும். ராஜ தந்திரயுக்திகளால் வெற்றி பெறும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 18, 19, 22 அதிர்ஷ்ட எண்கள் : 1, 4 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு அதிர்ஷ்ட திசை : வடக்கு
விருச்சிகம்
உருட்டல், மிரட்டலுக்கு அஞ்சாமல் உள்ளதை சொல்பவர்களே! சுக்ரன் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. புதன் சாதகமாக இருப்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். சோர்வு, கண் வலி, தொண்டை வலி நீங்கும். பூர்வீக சொத்தால் வருமானம் வரும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். அரசாங்க விஷயம் விரைந்து முடியும். சகோதரங்களின் அரவணைப்பு அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் சாதகமாக முடியும். புது வேலைக் கிடைக்கும். ராகுவும், சனியும் ராசிக்கு 12 – ல் மறைந்திருப்பதால் எதிர்ப்புகள், ஏமாற்றங்கள் வந்து நீங்கும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். ஷேர் மூலம் பணம் வரும். அரசியல்வாதிகளே! தொகுதி மக்கள் நலனில் அதிக கவனம் செலுத்தப்பாருங்கள். கன்னிப் பெண்களே! நிஜம் எது, நிழல் என்பதை தெளிவாக உணர்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் மத்தியில் உங்களைப் பற்றி நல்ல இமேஜ் உண்டாகும். விட்டுக் கொடுத்துப் போவதால் வெற்றி பெறும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 16, 21, 22 அதிர்ஷ்ட எண்கள் : 6, 8 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், ரோஸ் அதிர்ஷ்ட திசை : கிழக்கு
தனுசு
தன்மானம் அதிகம் உள்ள நீங்கள் தன்னலமில்லாதவர்கள். ராகுவும், சனியும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். புது வீடு கட்டி குடி புகுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசு காரியங்கள் சுலபமாக முடியும். உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். சுக்ரன் சாதகமாக இருப்பதால் விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். முடிவுகளெடுப்பதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சூரியன் உங்கள் ராசிக்குள் நுழைந்ததால் முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். கண் எரிச்சல், காது மற்றும் மூட்டு வலி வந்து நீங்கும். அரசாங்க விஷயம் தடைப்பட்டு முடியும். அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டத்தைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். கன்னிப் பெண்களே! கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 16, 18, 19 அதிர்ஷ்ட எண்கள் : 2, 5 அதிர்ஷ்ட நிறங்கள் : பிங்க், வெளிர்நீலம் அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
மகரம்
வாக்குவாதம் என வந்து விட்டால் வரிந்துக் கட்டி வாதாடுபவர்களே! சுக்ரன் உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்திருப்பதால் மனப்போராட்டங்கள் ஓயும். நிம்மதி கிடைக்கும். நீண்ட நெடுநாட்களாக தள்ளிப் போன காரியங்களெல்லாம் முடிவடையும். வி. ஐ. பியின் நட்பு கிடைக்கும். சிலருக்கு வேற்றுமாநிலத்தில், வெளிநாட்டில் வேலை அமையும். தூரத்து சொந்தங்களுடன் இருந்த பகைமை நீங்கும். வேற்றுமதத்தவர்களின் ஆதரவுக் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று புது வீடு வாங்குவீர்கள். சகோதரங்களால் இருந்த சங்கடங்கள் நீங்கும். 16 – ந் தேதி முதல் சூரியன் 12 – ல் மறைந்திருப்பதால் அரசாங்க விஷயம் தடைப்பட்டு முடியும். திடீர் பயணங்கள் உண்டு. உறவினர், நண்பர்களுடன் இருந்த விரிசல்கள் விலகும். அநாவசியச் செலவுகளைக் குறைத்து அத்தியாவசியச் செலவுகளை மட்டும் செய்யப்பாருங்கள். அரசியல்வாதிகளே! வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புதிய சலுகைகளால் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 18, 19, 20 அதிர்ஷ்ட எண்கள் : 4, 6 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, சில்வர்கிரே அதிர்ஷ்ட திசை : மேற்கு
கும்பம்
உதட்டால் உளறாமல் இதயத்தால் பேசுபவர்களே! சூரியனும், புதனும் லாப வீட்டில் அமர்ந்ததால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். அரசு காரியங்கள் சுலபமாக முடியும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள். பூர்வீக சொத்தில் சீர்த்திருத்தம் செய்வீர்கள். புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். வருடக் கணக்கில் தள்ளிப் போன வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். செவ்வாய் ராசிக்கு 8 – ல் மறைந்திருப்பதால் எதிர்மறை எண்ணங்கள் தலைத்தூக்கும். பணப்பற்றாக்குறை ஏற்படும். சகோதரங்கள் அதிருப்தி அடைவார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்துச் செல்லும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். இரத்த அழுத்தம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளே! தலைக்கு நெருக்கமாக இருப்பவர்களுக்கு நீங்கள் நண்பர்களாவீர்கள். கன்னிப் பெண்களே! மனசை அலைபாயவிடாமல் ஒருநிலை படுத்துங்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகள் இருக்கும். வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு ஒரு அங்கீகாரம் இல்லாமல் போகும். வளைந்து கொடுக்க வேண்டிய வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 16, 17, 19 அதிர்ஷ்ட எண்கள் : 3, 7 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், கரு நீலம் அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
மீனம்
உள்ளுக்குள் அழுதாலும் வெளியில் சிரிப்பவர்களே! சுக்ரன் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வீடு கட்டுவது, வாங்குவது நல்ல விதத்தில் முடியும். வெள்ளிப் பொருட்கள் வாங்குவீர்கள். சூரியனும், புதனும் 10 – ம் வீட்டில் அமர்ந்ததால் தடைகள் நீங்கும். எதிர்ப்புகள் குறையும். அரசால் அனுகூலம் உண்டு. விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். உங்கள் ராசிக்கு அஷ்டத்துச் சனி தொடர்ந்தால் யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைப் புரிந்துக் கொண்டு செயல்படப்பாருங்கள். சகோதர வகையில் அலைச்சல் வந்து நீங்கும். அரசியல்வாதிகளே! கட்சியின் மூத்த உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசுவீர்கள். கன்னிப் பெண்களே! உங்களை ஏமாற்றி வந்த சிலரிடமிருந்து விடுபடுவீர்கள். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் உங்களுடைய திறமையை மேலும் அதிகரித்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். மாறுபட்ட பாதையில் சென்று முன்னேறும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 17, 19, 21 அதிர்ஷ்ட எண்கள் : 5, 9 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, இளம்சிவப்பு அதிர்ஷ்ட திசை : தெற்கு