தின பலன்

 மேஷம்
குடும்பத்தில் அமைதி திரும்பும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், மஞ்சள்

ரிஷபம்
பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுதான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் வரும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மாலைப் பொழுதிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், ப்ரவுன்

மிதுனம்
குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : வைலெட், இளஞ்சிவப்பு

கடகம்
கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் அனுவலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பழைய சிக்கல்கள் தீரும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ப்ரவுன்

சிம்மம்
குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். அக்கம் – பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், பிங்க்

கன்னி
எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். சகோதரி உதவுவார். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். புது வேலை அமையும். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ப்ரவுன்

துலாம்
துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, பச்சை

விருச்சிகம்
கணவன் – மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். தோற்றப் பொலிவுக் கூடும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ப்ரவுன்

தனுசு
முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் பற்றுவரவு சுமார்தான். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையிலிருந்து தடைப்பட்ட வேலைகள் விரைந்து முடியும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ஆரஞ்சு

மகரம்
திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, மஞ்சள்

கும்பம்
எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ஊதா

மீனம்
உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், கருநீலம்

Leave a Reply