சீனா, லாஸ் வேகாஸ், மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கேசினோ என்று சொல்லக்கூடிய சூதாட்ட விடுதிகளை நடத்தி வரும் அமெரிக்க தொழிலதிபர் அடெல்சன், 2013ஆம் ஆண்டில் மிக அதிகம் சம்பாதித்த நபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் நாள் ஒன்றுக்கு ரூ.254கோடி சம்பாதித்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் போர்ப்ஸ் என்ற பத்திரிகை, கடந்த 2013ஆம் ஆண்டில் அதிகம் சம்பாதித்த தொழிலதிபர் யார் என்ற சர்வேயை எடுத்துள்ளது. இதில் சூதாட்ட விடுதி நடத்தி வரும் அடெல்சன் முதலிடத்தை பெறுகிறார். இவர் பிரபல பங்குவர்த்தக நிபுணர் வாரன் பப்பெட்டின் வருமானத்தை இவ்வருடம் முந்திவிட்டார் என்று அந்த சர்வே கூறுகிறது.
2013ஆம் ஆண்டு மட்டுமே இவர் 41 மில்லியன் அமெரிக்க டாலர் சம்பாதித்து உள்ளார். இவருடைய மொத்த மதிப்பு 37 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இந்திய மதிப்புப்படி பார்த்தால் இவருடைய சொத்து மதிப்பு சுமார் ரூ.2.3 லட்சம் கோடி(Rs.2285120000000.00) ஆகும். இவருக்கு அடுத்ததாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுகெர்பெர்க் நாள் ஒன்றுக்கு ரூ.230 கோடி சம்பாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது இடத்தை அமேசான் அதிபர் ஜெப் பெசோஸ் அவர்கள் இடம்பெறுகிறார்.
போர்ப்ஸ் பத்திர்கையின் சர்வே படி முதல் பத்து இடங்களை பிடித்த தொழிலதிபர்களின் விபரம் வருமாறு:
1. Sheldon Adelson
2. Mark Zuckerberg
3. Jeff Bezos
4. Warren Buffett
5. Christy Walton
6. S. Robson Walton
7. Alice Walton
8. Jim Walton
9. Larry Page
10. Bill Gates