சென்னை ஓபன் டென்னிஸ்: லோபஸ் ,போபண்ணா ஜோடி வெற்றி

சென்னை ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டிஏ.டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப்போட்டியில் ஸ்பெயின் வீரர் குயில் லர்மோ கார்சியா லோபஸ் முதல் சுற்றில் கஜகஸ்தானை சேர்ந்த அலெக்சாண்டரை  7–5, 6–0 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2–வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரரான சோம்தேவ் தேவ் வர்மன் முதல் சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார். ராம்குமார் ராமநாதன் 4–6, 6–3, 6–4 என்ற கணக்கில் அவரை வீழ்த்தினார்.

இரட்டையர் பிரிவுக்கான முதல் சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்கா-பெனாய்ட் பேர் ஜோடியை 6-4, 4-6, 11-9 ஆகிய புள்ளிகள் கணக்கில் போபண்ணா-குரேஷி ஜோடி வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

Leave a Reply