சென்னை விமான நிலையத்தின் மேற்கூரை கண்ணாடி கீழே விழுந்து நொறுங்கியதால் விமான நிலையத்தில் நேற்று மாலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான நிலையங்களில் கட்டுமான பணிகள் கடந்த சில மாதங்களாக ரூ.2,015 கோடி செலவில் நடந்து வருகிறது. இந்த கட்டிடப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட தினத்தில் இருந்து இதுவரை 12 முறை சிறுசிறு விபத்துக்கள் நடந்துள்ளன. அலங்கார கண்ணாடி மட்டும் அடிக்கடி விழுந்து வருவதால் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
நேற்று காலை 9.15 மணிக்கு உள்நாட்டு முனையத்தில் 20 அடி உயரத்தில் பதிக்கப்பட்டிருந்த ஒரு பெரிய கண்ணாடி கீழே விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதி உள்நாட்டு முனையத்தின் பின்பகுதி என்பதால் ஆள்நடமாட்டம் எதுவும் இல்லை. எனவே யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கண்ணாடி விழுந்த இடத்தை விமான நிலைய அதிகாரிகள் பார்வையிட்டு, அந்த இடத்தை சுத்தம் செய்யும்படி உத்தரவிட்டனர். மேலும் விழுந்த கண்ணாடிக்கு பதில் வேறு கண்ணாடி பதிக்க கட்டுமான பணியாளர்களுக்கு உத்தரவிட்டு சென்றுவிட்டனர்.
அடிக்கடி இம்மாதிரியான அலங்கார கண்ணாடி உடைந்துவிழுவதால் பயணிகளிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது.