போர்ச்சுக்கல் நாட்டில் ‘பிளாக் பாந்தர்’ என்று கால்பந்து ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் பிரபல முன்னால் கால்பந்து வீரர் எசிபியோ நேற்று மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71.
1966ஆம் ஆண்டில் நடந்த உலக்கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுக்கல் நாடு மூன்றாவது இடத்தை பிடிக்க காரணமாக இருந்ததே எசிபியோ அடித்த ஒன்பது கோல்கள்தான். அந்த உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்த வீரராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது தாய்நாட்டிற்காக 64 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள எசிபியோ மொத்தம் 41 கோல்கள் அடித்துள்ளார்.
எசிபியோவின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள போர்ச்சுக்கல் அரசு, அவரது மரணத்தையொட்டி மூன்று நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்றும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. போர்ச்சுக்கல் நாட்டு கால்பந்து சம்மேளன தலைவர் செப் பிளாட்டர் தனது இரங்கல் அறிக்கையில், ‘நாடு ஒரு கால்பந்து ஜாம்பவானை இழந்துவிட்டது அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர்களுக்கும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.