நடிகைகளின் இரவு நிகழ்ச்சியில் உ.பி. முதல்வர் கலந்து கொண்டதால் சர்ச்சை

உத்தரபிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ், பாலிவுட் முன்னணி நடிகைகள் கலந்து கொண்ட ஒரு இரவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ்வின் சொந்த ஊரான சைபை என்னும் நகரில் மகோத்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று பாலிவுட் முன்னணி நடிகைகளால் நேற்று இரவு நடத்தப்பட்டது.

தீபிகா படுகோனே, மாதுரி தீக்ஷித், மல்லிகா ஷெராவத், அலியா பட் மற்றும் சல்மான்கான், ரன்வீர் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களை அழைத்து வருவதற்காக ஏழு ஜெட் விமானங்களை ஒரு நிறுவனம் ஸ்பான்சர் செய்திருந்தது. இந்த நிகழ்ச்சி நேற்று இரவு வெகு சிறப்பாக நடந்துகொண்டிருந்தபோது உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், நேரில் வந்து நிகழ்ச்சிக்கு கலந்துகொள்ள வந்த நடிகர், நடிகைகளை உற்சாகப்படுத்தினார்.

சமீபத்தில் முசாபர்நகர் கலவரத்தால் குழந்தைகள் உள்பட 32 பேர் மரணம் அடைந்தார்கள். அவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்குரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யாத முதல்வர் நடிகைகள் கலந்துகொண்ட இரவு நிகழ்ச்சிக்கு கலந்துகொண்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் முதல்வருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனால் உத்தரபிரதேச அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply