ராகுல்காந்தியின் இமெஜை பரப்ப ரூ.500 கோடியா? காங்கிரஸ் மறுப்பு!

காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் என எதிர்பார்க்கப்படும் ராகுல்காந்தியின் இமேஜை உயர்த்துவதற்காக ரூ.500 கோடிக்கு ஜப்பான் நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக வந்த தகவலை காங்கிரஸ் மறுத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தியின் புகழை இந்தியா முழுவதும் பரப்புவதற்காக ஜப்பான் நாட்டின்  Dentsu and Burson-Marsteller என்ற தனியார் நிறுவனத்திடம் ரூ.500 கோடிக்கு ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனம் ராகுல்காந்தியின் புகழை வரும் தேர்தலுக்குள் இந்தியா முழுவதும் பரப்புவது எப்படி என்று திட்டம் வகுத்து தரும் என்றும் நேற்று இணையதளங்களிலும், தொலைக்காட்சி செய்திகளிலும் பரவியது. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது.

இன்று காலை காங்கிரஸின் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுரஜ்வாலா இந்த செய்தியை மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். ராகுல்காந்தியின் இமேஜை உயர்த்த எந்த நிறுவனத்திடமும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. இந்திய மக்களின் மனதில் நீங்கா புகழ் பெற்ற நேரு குடும்பத்தின் வழிவந்த ராகுல்காந்தி, காங்கிரஸ் தொண்டர்களின் பலத்தினால் இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்துவிட்டார். எனவே நேற்று வெளியான தகவல் வீண் வதந்தி என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply