சமீபத்த்தில் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜா நேற்று திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்திற்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார்.
தமிழ் திரையுலகில் இளையராஜா செய்த சாதனைகள் மகத்தானது. அவருக்கு சென்ற வாரம் திடீரென நெஞ்சுவலி வந்ததால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தார். அவருக்கு இதய ரத்த குழாயில் ஏற்பட்டிருந்த அடைப்பை நீக்குவதற்காக ஆஞ்சியோபிளாட்டி என்ற சிகிச்சை சிறப்பாக அளிக்கப்பட்டது. அதன்பின்னர் பூரண குணம் அடைந்த இளையராஜா தற்போது மீண்டும் தனது இசையமைக்கும் பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று திருவண்ணாமலை கோவிலுக்கு இளையராஜா வந்தார். அங்கு அவர் ஸ்ரீஅருணாச்சலேஸ்வரர் சந்நிதி, உண்ணாமுலையம்மன் மற்றும் சம்மந்த விநாயகர் சந்நிதியில் சுவாமி தரிசனம் செய்தார். பின்பு திருவண்ணாமலையில் உள்ள ரமணாஸ்ரமத்திற்கு சென்று அங்கு ஓய்வு எடுத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘உடல்நலமின்றி மருத்துவமனையில் இருந்தபோது அருணாச்சலேஸ்வரரை வேண்டிக்கொண்டதாகவும் அவரது அருளால்தான் தான் மிண்டு எழுந்து வந்ததாகவும் அவர் கூறினார்.
அங்கிருந்து நேராக இளையராஜா அமிதாப்பச்சன் படம் ஒன்றிற்காக இசையமைக்க பெங்களூர் சென்றார்.