சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் ஆண்டு தோறும் சிறந்த கால்பந்து வீரருக்கான தங்கப்பந்து விருது வழங்கப்பட்டு வருகிறது.
2013–ம் ஆண்டுக்கான சிறந்த வீரர்கள் பட்டியலில் அர்ஜென்டினாவை சேர்ந்த மெஸ்சி (பார்சி லோனா) போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானா ரோனால்டோ (ரியல் மாட்ரிட்) பிரான்சை சேர்ந்த பிராங்க் ரைபரி (பேயான் முனிச்) ஆகியோர் 3 பேர் இடம் பெற்று இருந்தனர்.
இதில் 1365 பு-ள்ளிகளை பெற்ற போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு தங்கப்பந்து விருது வழங்கப்பட்டது. அவர் 2–வது முறையாக உலகின் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.