நாடாளுமன்ற தேர்தலில் தேவ்யானியின் தந்தை போட்டி

அமெரிக்காவில் விசா மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டு, பின்னர் நாடு கடத்தப்பட்ட இந்திய பெண் துணைத்தூதர் தேவ்யானி தற்போது டெல்லியில் தங்கி பணிகளை கவனித்து வருகிறார். அவருடைய இரு குழந்தைகளும், கணவரும் அடுத்த மாதம் இந்தியா திரும்ப உள்ளனர்.

இதை தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தேவ்யானியின் தந்தை கோப்ரகடே வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். நான் ஓய்வு பெற்றதுமே அரசியலில் ஈடுபட விரும்பினேன். தேவ்யானியின் பிரச்சனைக்குப் பின் எடுக்கப்பட்ட திடீர் முடிவல்ல இது. வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். எந்த கட்சியில் சேருவது என்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறேன். என்னிடம் பல கட்சிகள் தொடர்பு கொண்டு பேசி வருகின்றன. இதுகுறித்த முறையான அறிவிப்பை வரும் நாட்களில் அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே தேவ்யானி ஆதர்ஷ் ஊழல் வழக்கில் தொடர்பு கொண்டவர் என்று கூறப்பட்டு வரும் நிலையில் அவரை அந்த ஊழலில் இருந்து காப்பாற்றவே காங்கிரஸ் அரசு தேவ்யானியின் அமெரிக்க பிரச்சனையில் சில அதிரடி உத்தரவுகள் எடுத்தது என்று கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேவ்யானியின் தந்தை காங்கிரஸில் சேருவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply