சென்னையில் 11 பெண் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 23 இன்ஸ்பெக்டர்களை இடம் மாற்றி சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை நகரில் அவ்வப்போது திடீர் திடீரென போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றுவது சமீபகாலமாக வழக்கமாகிவிட்டது. அதன்படி நேற்று சென்னை நகர போலீஸ் கமிஷனர் வெளியிட்ட ஒரு உத்தரவில் 11 பெண் இன்ஸ்பெக்டர்களையும், 12 ஆண் இன்ஸ்பெக்டர்களையும் இடம் மாற்றினார்.
மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர்களின் பெயர் மற்றும் மாற்றப்பட்ட இடங்களின் பெயர்கள் வருமாறு:
நடராஜன் – மத்திய குற்றப்பிரிவு
செல்லப்பா – நுங்கம்பாக்கம் சட்டம் & ஒழுங்கு
ராமசாமி – தலைமைச் செயலக காலனி சட்டம் மற்றும் ஒழுங்கு
பிரபு – வேப்பேரி சட்டம் மற்றும் ஒழுங்கு
மணிமாறன் – கோடம்பாக்கம் குற்றப்பிரிவு
பெரியபாண்டியன் – அமைந்தகரை குற்றப்பிரிவு
மார்ட்டின் மரியதாஸ் – அடையாறு குற்றப்பிரிவு
டெல்லி பாபு – ஐ.எஸ். உளவுப்பிரிவு
கமலக்கண்ணன் – ஐ.எஸ். உளவுப்பிரிவு
சுகிலா – புளியந்தோப்பு அனைத்து மகளிர் பிரிவு
பன்னீர்செல்வி – ஐகோர்ட் அனைத்து மகளிர் பிரிவு
நித்யகுமாரி – ஆவடி அனைத்து மகளிர் பிரிவு
விஜயலட்சுமி – எழும்பூர் அனைத்து மகளிர் பிரிவு
மோகனேஸ்வரி – மடிப்பாக்கம்அனைத்து மகளிர் பிரிவு
நசீமா – வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் பிரிவு.
போலீஸ் இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிந்த சிபுகுமார், கோபால், பழனிவேல், கல்யாணி, கனிமொழி, வசந்தி, ராமேஸ்வரி, கவிதா ஆகியோர்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.