சென்னையில் மு.க.அழகிரி பரபரப்பு பேட்டி

திமுகவில் இருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட மு.க.அழகிரியின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை திமுக தரப்பு மட்டுமின்றி பல அரசியல் கட்சிகள் உற்றுநோக்கி வருகின்றன.

இந்நிலையில் இன்று காலை சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள தனது இல்லத்தில் மு.க.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: என்னுடைய ஆதரவாளர்களை நீக்கியதற்கான காரணத்தை கேள்வி கேட்ட காரணத்திற்காகவே நான் நீக்கப்பட்டுள்ளேன். எந்த குற்றமும் செய்யாத மதுரை நகர திமுக நிர்வாகிகளின் நியாயத்திற்காக போராடிய எனக்கு கிடைத்த பரிசுதான் இந்த நீக்கம்.
திமுகவில் ஜனநாயகம் செத்துக்கொண்டே வருகிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடும் எண்ணம் இல்லை. அதேபோல் திமுகவுக்கு எதிராக போட்டி வேட்பாளர்களை நிறுத்தும் எண்ணமும் இல்லை. ஆனால் திமுக தானாகவே படுதோல்வி அடையும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

வரும் 31ஆம் தேதி மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்து எனது அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை குறித்து பேட்டியளிப்பேன். திமுகவின் ஒரு சிலர் மட்டும் கட்சியின் சொத்தை கைப்பற்ற முயற்சி செய்வதற்கு என்னிடம் நிறைய ஆதாரங்கள் உள்ளது. அவற்றை விரைவில் வெளியிடுவேன். இவ்வாறு அழகிரி கூறினார்.

Leave a Reply