ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரத்தையும், மண்டபம் பகுதியையும் இணைக்கும் பாலமாக பாம்பன் பாலம் இருந்து வருகிறது. இது ஆங்கிலேயர் காலத்தில் 1914ஆம் ஆண்டு கட்டப்பட்டு அதில் ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டது. தற்போது இந்த பாலம் திறக்கபட்டு 100 ஆண்டுகள் ஆனதை ஒட்டி இன்று பாம்பன் பால நூற்றாண்டு விழா மண்டபம் ரயில் நிலையத்தில் கொண்டாடப்பட்டது.
விழாவை ஒட்டி பாம்பன் பாலம் மின்விளக்குகளால் அலங்கரிக்கபட்டு ஜொலிக்கப்பட்டிருந்தது. இங்கு வரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் பொதுமக்களும் பாம்பன் பாலத்தின் அழகை கண்டு ரசித்தனர்.
பாம்பன் பால நூற்றாண்டு விழா ஏற்பாடுகளை தெற்கு ரயில்வே நிர்வாக பொதுமேலாளர் ராஜேஸ் மிஸ்ரா, கூடுதல் பொதுமேலாளர் நாராயணன், மதுரை கோட்ட மேலாளர் ரஸ்தோகி ஆகியோர் மிகச்சிறப்பாக செய்து வந்தனர்.
இந்த விழாவில் கலந்து கொள்ள முன்னாள ஜனாதிபதி அப்துல்கலாம் வருகை தந்திருந்தார். அவரை விழாக்குழுவினர் மரியாதையுடன் வரவெற்றனர். விழாவில் கலந்துகொண்ட பின்னர் அப்துல்கலாம் பாம்பன் பாலத்தின் அழகை கண்டு ரசித்தார். மேலும் அப்துல்கலாம் அவர்களின் சொந்த ஊரே ராமேஸ்வரம் என்பது குறிப்பிடத்தக்கது.