சிம்பு தங்கை இலக்கியாவுக்கு பிப்ரவரி 10ல் திருமணம்

இயக்குனர் டி.ராஜேந்தரின் ஒரெ மகளும், நடிகர் சிம்புவின் தங்கையுமான இலக்கியாவுக்கு வரும் பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி சென்னையில் திருமணம் நடக்கவுள்ளது.

சிம்புவின் ஒரே தங்கை இலக்கியாவுக்கு கடந்த சில மாதங்களாக மாப்பிள்ளை பார்த்துவந்தனர். தற்போது அவருக்கு திருமணம் முடிவாகியுள்ளது. மாப்பிள்ளை அபிலாஷ் ஐதராபாத்தை சேர்ந்தவர். பி.டெக் பட்டதாரியான இவர் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி இலக்கியாவை திருமணம் செய்ய இருக்கிறார்.

இந்த திருமணம் சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் காலை 9 மணிக்கு நடைபெற இருக்கிறது. இருவீட்டாரும் திருமண ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வருகின்றனர். மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியும் அதே ஓட்டலில் மாலை 6.30 மணிக்கு நடைபெறும் என கூறப்படுகிறது.

சிம்பு, அவர் தம்பி குறளரசன் மற்றும் டி.ராஜேந்தர் குடும்பத்தினர் திருமண ஏற்படுகளை கவனித்து வருகின்றனர்.

Leave a Reply