இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகம்மது அசாருதீன் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்நாத் முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் அசாருதினை நேரில் சந்தித்து அதற்கான அனுமதியையும் பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் தேஷ்முக் இயக்க உள்ளார்.
1963ஆம் ஆண்டு பிறந்த அசாருதின் 1983ஆம் ஆண்டு முதன்முதலாக கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்தார். சூதாட்ட சர்ச்சையில் சிக்கியதால் கடந்த 2000ஆம் ஆண்டு அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. முதலில் நவ்ரீன் என்ற ஐதராபாத் பெண்ணை மணந்த அசாருதீன் பின்னர் நடிகை சங்கீதா பிஜ்வானியுடன் ஏற்பட்ட காதலால் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு அவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களது வாழ்க்கையில் 2010ஆம் ஆண்டு கருத்துவேறுபாடு ஏற்பட்டு பின்னர் பிரிந்தனர்.
பெரும் திருப்பங்கள் நிறைந்த அசாருதீனின் வாழ்க்கை வரலாறு படத்தின் திரைக்கதை தற்போது தயாராகிவிட்டது. அசாருதின் வேடத்தில் நடிக்க முன்னணி பாலிவுட் நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த படம் குறித்த முறையான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரும் என ஏக்தாகபூர் கூறியுள்ளார்.