தமிழக சட்டசபை இன்று கூடுகிறது

தமிழக கவர்னர் ரோசய்யா உரையுடன் இன்று காலை  தமிழக சட்டசபை கூட இருக்கின்றது. இதற்கான உத்தரவு ஏற்கனவே கடந்த 21ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று கூட இருக்கின்றது. இன்று காலை 11.55 மணிக்கு வருகை தரவுள்ள கவர்னரை சபாநாயகர் மற்றும் சட்டசபை செயலாளர் ஆகியோர் வரவேற்க உள்ளனர்.

கவர்னர் ரோசய்யா இன்று தமிழக சட்டசபையில் ஆங்கிலத்தில் உரையாற்றுவார் என்றும் அதன் தமிழ் மொழிபெயர்ப்பை சபாநாயகர் தனபால் வாசிப்பார் என்றும் கூறப்படுகிறது. அதன்பின்னர் சபாநாயகர் தலைமையில் நடக்க உள்ள அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எத்தனை நாட்கள் சபையை நடத்தவேண்டும் என்று முடிவு செய்யப்பட உள்ளதாக அரசு குறிப்பு ஒன்று தெரிவிக்கின்றது.

இன்றைய கவர்னர் உரையில் அரசு புதிய திட்டங்களை அறிவிக்க இருப்பதாகவும், வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு சலுகைகள் அறிவிக்கப்பட உள்ளதாகவும் தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply