2012ல் நடந்த கூட்டுறவு தேர்தல் ரத்து

கடந்த 2012ஆம் ஆண்டு நடந்த கூட்டுறவு தேர்தல் முறையாக நடைபெறாததால் அந்த தேர்தலை ரத்து செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி கூட்டுறவு சங்க தேர்தல் நடந்தது. இதில் தெர்ந்தெடுக்கப்பட்டவர்கள் முறையாக தேர்வு செய்யப்படவில்லை என்றும், இந்த தேர்தலை மாநில தேர்வு மையம் நடத்தாமல் கூட்டுறவு சங்க வாரியமே நடத்தியதால் பல முறைகேடுகள் நடந்துள்ளது என்றும் சென்னை உயர்நீதி மன்றத்ஹ்டில் வின்செண்ட், கரிகாலன் உள்பட நான்கு பேர் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீது விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பையா, கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து செய்யப்படுகிறது என்றும் மீண்டும் முறையாக தேர்தல் நடத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார். இதனால் தேர்வு செய்யப்பட்ட 3,589 உறுப்பினர்களும் பதவி இழக்கின்றனர்.

Leave a Reply