சென்னையை போலவே திருப்பூரிலும் ஒவ்வொரு வருடமும் புத்தகக்கண்காட்சி நடைபெற்று வருகிறது. தற்போது 11 வது புத்தக்கத்திருவிழா ஜனவரி 31ஆம் தேதி முதல் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த புத்தகத்திருவிழா பிப்ரவரி 9ஆம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் 100 அரங்குகள் திருப்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த புத்தக கண்காட்சியை பாரதிய புத்தகாலயா நிறுவனமும், பின்னல் புத்தக டிரஸ்டும் இணைந்து கே.ஆர்.சி. சிட்டி செண்டரில் நடந்து வருகிறாது. தினமும் காலை 11மணி முதல் இரவு 9.30 வரை இந்த புத்தக்கண்காட்சி திறந்திருக்கும். பல பதிப்பகங்களில் இருந்து வெளியான லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்காக இங்குள்ள அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியில் புத்தகங்கள் வாங்குவோர்களுக்கு 10 சதவிகிதம் தள்ளுபடி சலுகை அளிக்கப்படுகிறது. கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், கவியரங்கம், கருத்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகளும் நாள்தோறும் நடந்து வருகிறது. திருப்பூர் நகர பொதுமக்கள் மிக ஆர்வத்துடன் கலந்துகொண்டு ஏராளமான புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்