ரஞ்சி கோப்பை கிரிக்கெட். கர்நாடகா சாம்பியன்.

கடந்த சில நாட்களாக ரஞ்சித் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இன்று முடிந்த இறுதிப்போட்டியில் கர்நாடக அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஐதராபத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டி, கர்நாடகா, மற்றும் மகாராஷ்டிரா அணிகளுக்கு இடையே நடந்தது. ஐந்து நாள் போட்டியான இந்த போட்டி கடந்த 29ஆம் தேதி ஆரம்பமானது.

முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த மகாராஷ்டிரா அணி 104.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 305 ரன்கள் எடுத்தது. பின்னர் இதற்கு பதிலடி கொடுத்த கர்நாடகா அணி171.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 515 ரன்களை குவித்தது. இந்த அணியின் ராகுல், மற்றும் கணேஷ் சதீஷ் ஆகிய இருவரும் சதம் அடித்தனர்.

முதல் இன்னிங்ஸில் 210 ரன்கள் பின் தங்கியுள்ள நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த மகாராஷ்ரா, 91.2 ஓவர்களில் 366 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கர்நாடகா அணி 40.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கள் மட்டுமே இழந்து இலக்கை அடைந்து அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த போட்டியில் அபாரமாக விளையாடி 131 ரன்கள் எடுத்த ராகுல் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Leave a Reply