ஹரியானா முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடாவை ஒரு இளைஞர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் சார்பில் பானிபட் நகரில் நடந்த ஒரு பேரணியில் கலந்து கொள்ள இன்று காலை திறந்த காரில் மெதுவாக வந்து கொண்டிருந்த ஹரியானா முதலமைச்சர் பூபீந்தர்சிங் ஹூடாவை, சாலையின் ஓரத்தின் நின்று கொண்டிருந்த ஒரு இளைஞர் திடீரென அவரது அருகில் நெருங்கி வந்து கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த முதல்வர், அந்த இளைஞரை தள்ளிவிட்டார்.
பல வருடங்களாக வேலையில்லாத விரக்தியில் தான் அந்த இளைஞர் இவ்வாறு செய்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அந்த இளைஞரிடம் விசாரணை நடந்து வருகிறது.