தென்னாப்பிரிக்காவில் இனவெறியை எதிர்த்து போராடிய நெல்சன் மண்டேலா, கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் தேதி மரணம் அடைந்தார். மரணத்திற்கு முன்னர் அவர் எழுதி வைத்திருந்த உயில் தற்போது வெளியாகியுள்ளது.
நெல்சன் மண்டேலாவுக்கு மொத்தம் ரூ.25 கோடி சொத்துக்கள் இருப்பதாகவும், அதில் பாதியை மனைவி கிரகா மண்டேலாவுக்கு வழங்குவதாகவும் உயில் எழுதியுள்ளார். இதில் அவர் பயன்படுத்திய கார்கள் மற்றும் நகைகளும் அடங்கும்.
தனது குடும்பம் நடத்தும் அறக்கட்டளைக்கு தான் எழுதிய புத்தகங்களின் ராயல்டி தொகையை வழங்குவதாகவும் அவர் தனது உயிலில் எழுதியுள்ளார்.
மேலும் நெல்சன் மண்டேலா தனது குழந்தைகள், பேரக்குழந்தைகள் மற்றும் தனது கட்சியான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சிக்கும் பல கோடி சொத்துக்களை எழுதி வைத்துள்ளார். தனது உதவியாளர், மற்றும் தென்னாப்பிரிக்காவில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கு தனது சொத்தில் இருந்து சில பகுதிகளை நன்கொடையாக கொடுக்கவும் அவர் தன்னுடைய உயிலில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் தான் விவாகரத்து செய்த முன்னாள மனைவிக்கு எவ்வித சொத்துக்களையும் அவர் எழுதிவைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.