நான் ஈ படத்தை இயக்கிய எஸ்.எஸ். ராஜமெளலி தற்போது இயக்கி வரும் பிரமாண்டமான படம் பாஹுபாலி. சரித்திர பின்னணி கொண்ட இந்த படத்தில் அனுஷ்கா மகாராணி கேரக்டரில் நடித்து வருகிறார்.
வாள் சண்டை போன்ற ஆக்ஷன் காட்சிகள் அடங்கிய இந்த படத்திற்கு தற்போது திடீரென எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாஹுபாலி என்பது ஜைன மத துறவி ஒருவரது பெயர். உலக அமைதிக்காக பாடுபட்ட ஒருவரது பெயரில் எடுக்கும் படத்தில் வாள் சண்டை போன்ற வன்முறை காட்சிகள் இருப்பதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என ஜைன துறவிகள் நீதிமன்றம் சென்றுள்ளனர்.
நீதிமன்றம் இதுகுறித்து விளக்கம் அளிக்க படத்தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எனவே திடீரென இந்த பிரச்சனையால் படத்தை தலைப்பை மாற்றலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார் எஸ்.எஸ்.ராஜமெளலி.