இன்று முதல் நடைபெற உள்ள 15வது பாராளுமன்ற கூட்டதொடரில் தெலுங்கானா மசோதா உள்பட பல முக்கிய மசோத்தாக்கள் நிறைவேறும் என பிரதமர் மன்மோகன்சிங் நேற்று உறுதியாக கூறியுள்ள நிலையில் இன்று பேட்டியளித்த மத்திய நிதியமைச்சர், இந்த கூட்டத்தொடரில் தெலுங்கானா உள்பட எவ்வித மசோதாவும் நிறைவேற வாய்ப்பில்லை என்று கூறியிருப்பதால் டில்லி வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் முக்கியமான சில பிரச்சனைகளை எழுப்பக்கூடும் என்பதால் நாடாளுமன்றம் சுமூகமாக நடக்குமா என்பதே சந்தேகமாக உள்ள நிலையில் ப.சிதம்பரத்தின் ஊகப்படி எவ்வித மசோதாவும் நிறைவேற வாய்ப்பில்லை என்றுதான் டில்லியில் கூடியிருக்கும் எம்.பிக்கள் நிலை இருப்பதாக வட இந்திய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
தேர்தலுக்கு பின்னர் புதிய பாராளுமன்ற கூட்டத்தொடரில்தான் தெலுங்கானா உள்பட முக்கிய மசோத்தாக்களின் நிலை தெரியவரும்.