அணு உலைக்கு எதிரான காலவரையற்ற உண்ணாவிரதம் வாபஸ்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக சுப.உதயகுமாரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் ஆரம்பித்தனர். இன்று காலை மருத்துவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்கள் அனைவரும் உண்ணாவிரத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.

கூடங்குளத்தில் 3வது மற்றும் 4வது அணு உலை திட்டத்தை கைவிடவேண்டும் என்ற கோரிக்கை உள்பட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இடிந்தகரை கிராமத்தில் சுப.உதயகுமாரன் உள்ளிட்ட 11 பேர் காலவரையற்ற உண்ணாவிரத்ததை ஆரம்பித்தனர். 5வது நாளான நேற்று, சுப. உதயகுமாரன் உள்ளிட்ட ஒரு சிலரின் உடல்நிலை மிகவும் பாதிப்பு அடைந்ததால் அவர்களை மருத்துவர்கள் பரிசோதித்தனர். பின்னர் அப்பகுதி சமுதாய தலைவர்களின் வலியுறுத்தல் காரணமாக உண்ணாவிரதம் கைவிட முடிவு செய்யப்பட்டது. அடுத்த கட்ட போராட்டம் குறித்து வரும் 9ஆம் தேதி அறிவிக்கப்படும் என போராட்ட குழுவினர் தெரிவித்தனர்.

Leave a Reply