தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் அடுத்த படமான ‘கரகாட்டம்’ படத்தில் நடிக்க நடிகை ஸ்ரேயா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 2011ஆம் ஆண்டு தமிழில் ஸ்ரேயா கடைசியாக ஜீவாவுடன் ‘ரெளத்திரம் படத்தில் நடித்தார். அதன்பின்பு இந்த படத்தில்தான் நாயகியாக மீண்டும் வலம் வர இருக்கிறார்.
ஸ்ரேயா தற்பொது கன்னடத்தில் ‘சந்திரா’ என்ற ஒரே படத்தில் மட்டும்தான் நடித்து வருகிறார். வாய்ப்பு இல்லாமல் இருந்த ஸ்ரேயாவை தேடிப்பிடித்து தனது படத்தில் நாயகியாக நடிக்க வைத்துள்ளார் பாலா. கரகாட்டம் படம் நடனத்தை மையமாக கொண்டு தயாராகவுள்ள படம். ஸ்ரேயா நல்ல டான்சர் என்பதால் இந்த படவாய்ப்பு அவரை தேடி வந்துள்ளது. இந்த படத்திற்கு பின்னர் ஸ்ரேயா மீண்டும் கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரகாட்டம் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். சென்ற வாரம் இந்த படத்திற்காக தொடர்ந்து 6 நாட்கள் பணிபுரிந்து படத்திற்கு தேவையான ஆறு பாடல்களையும் முடித்து கொடுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.