பாராளுமன்றத்தின் முதல் நாளிலேயே கூச்சல் குழப்பம். நாளைவரை ஒத்திவைப்பு

நடப்பு பாராளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால் முதல் நாளான இன்றே நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடும் அமளியாக இருந்ததால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மக்களவியில் இன்று காலை 10 மணிக்கு கூடியதும் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் கேல்வி நேரம் தொடங்கிய சில நிமிடங்களீல் ஆந்திராவை சேர்ந்த எம்.பிக்கள், தெலுங்கானா விவகாரம் குறித்து கேள்வி கேட்டனர். இதனால் நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனால் அவையை நண்பகல் 12 மணிவரை சபநாயகர் மீராகுமார் ஒத்திவைத்தார். 12 மணிக்கு சபை மீண்டும் கூடியபோதும் கூச்சல், குழப்பம் நீடித்ததால் நாளை வரை கூட்டத்தை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறித்தார்.

இதே நிலைதான் மாநிலங்களவையிலும் நீடித்தது. அங்கு துணை சபாநாயகர் அவையை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தார். ஆனாலும் மாநிலங்களவையும் நாளை வரை ஒத்திவைக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

Leave a Reply