இன்றைய தினபலன்.

மேஷம்

மாலை 5 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையிலிருந்து தடைகள் நீங்கும். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்

ரிஷபம்

கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவது நல்லது. வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. திடீர் பயணங்களால் அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மாலை 5 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானித்து செயல்படப்பாருங்கள். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ

மிதுனம்

குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் புதுத் திட்டங்களை அதிகாரிகள் வரவேற்பார்கள். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே

கடகம்

புதிதாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களாலானவற்றை செய்து கொடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு

சிம்மம்

கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். நட்பு வட்டம் விரியும். நேர்மறை எண்ணங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்

கன்னி

மாலை 5 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். மாலையிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்

துலாம்

கணவன்-மனைவிக்குள் ஆரோக்‌‌‌‌கியமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். பழைய பிரச்னைகளை பேசி தீர்ப்பீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மாலை 5 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் முன்எச்சரிக்கையுடன் செயல்படப்பாருங்கள். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்

விருச்சிகம்

கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பொதுக் காரியங்கள் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமடைவீர்கள். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்

தனுசு

புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு

மகரம்

எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி கிட்டும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்

கும்பம்

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். உங்களை தவறாக நினைத்துக் கொண்டிருந்தவர்களின் மனசு மாறும். சொந்த-பந்தங்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்

மீனம்

சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். முகப்பொலிவுக் கூடும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்

Leave a Reply