சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் ஒலிப்பதிவு கூடத்தில் ஆல்பம் ஒன்று தயாரிப்பதற்காக மும்முரமாக வேலை செய்துகொண்டிருந்தபோது, திடீரென உள்ளே நுழைந்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகன், ஒலிப்பதிவை உடனடியாக நிறுத்தும்படி ரகளை செய்து, தனது தந்தையை அழைத்து கொண்டு சென்றுவிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதாக ரஹ்மான் இன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
ஆங்கில ஆல்பம் ஒன்று தயார் செய்வதற்காக அதிகாலை 3 மணியளவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வேலை செய்துகொண்டிருந்தபோதுதான் இந்த சம்பவம் நடந்தது. தனது தந்தை தினமும் குறைந்தது ஏழு மணிநேரமாவது உறங்க வேண்டும் என்றும் ஓய்வில்லாமல் வேலை செய்துகொண்டிருந்ததால்தான், இதுமாதிரியான ரகளை செய்ய வேண்டிய நிலை வந்தது என்றும் ரஹ்மான் மகன் அமீன் கூறியதாக அவர் கூறியுள்ளார்.
தனது மகனை சமாதானப்படுத்த ஏ.ஆர்.ரஹ்மான் எவ்வளவோ முயற்சித்தும், பலனின்றி இறுதியில் ஒலிப்பதிவை ரத்து செய்துவிட்டு, மகனுடன் ரஹ்மான் சென்றுவிட்டதாகவும், ரஹ்மான் தனது ஃபேஸ்புக்கில் கூறியிருக்கிறார். தந்தை மகனை கண்டித்த காலங்கள் போய், தற்போது தந்தையை மகன் கண்டிக்கும் காலம் வந்துவிட்டதாக அவர் மேலும் கூறியுள்ளார்.