உலகில் 50 அதிகாரம் மிக்க பெண்கள் பட்டியலில் இரண்டு இந்தியர்கள்.

உலகின் மிகவும் அதிகாரம் மிக்க 50 பெண்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த இரண்டு பெண்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவர் பெப்சிகோ நிறுவன தலைவர் இந்திரா நூயி, மற்றொருவர் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் நிர்வாக இயக்குனர் சாந்தா கோச்சார். இதில் இந்திரா நூயி 3ஆவது இடத்தையும், சாந்தா கோச்சார் 18 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

அதிகாரம் மிக்க 50 பெண்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்  ஜெனரல் மோட்டார்ஸ் தலைமைச் செயல் அதிகாரி மேரி பாரா. இவர்தான் இந்த நிறுவனத்தின் முதல் பெண் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது இடத்தில் ஐபிஎம் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி கினி ரொமெட்டி உள்ளார். நான்காவது இடத்தில் பெட்ரோபிராஸ் தலைமைச் செயல் அதிகாரி மரியா தாஸ் கிரா சில்வா பாஸ்டர் என்ற பெண்ணும், ஃபேஸ்புக் சிஓஓ ஷெரில் சாண்பெர்க் 11- வது இடத்திலும், யாகூ தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி மரிஸா மேயர் 14-வது இடத்திலும், கூகுளின் மூத்த துணைத் தலைவர் சூசன் வொஜிகிகி 20-வது இடத்திலும் உள்ளனர்.

பெண்களும் உயர் பதவிக்கு வரமுடியும் என வாழ்வில் நிரூபித்தவர்கள் இந்த பட்டியலில் உள்ள பெண்கள் என இந்த பட்டியலை வெளியிட்டுள்ள ஃபார்ச்சூன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply