டெல்லி விமானத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தியதாக சென்னையை சேர்ந்தவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று டெல்லி விமானநிலையத்துக்கு வந்த பயணிகளிடம் சோதனை செய்துகொண்டிருந்த போது, சென்னை, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களை சேர்ந்த மூவரிடம் சேர்ந்து 8.9 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சர்வதேச விமான நிலையத்தின் எதிரில் ஒரு மர்ம நபர் இந்த தங்கத்தை கொடுத்ததாகவும், இதை பத்திரமாக சிங்கப்பூரில் சேர்த்துவிட்டால் தங்களுக்கு பெரும் பணம் கமிஷனாக கொடுப்பதாக கூறியதால் தாங்கள் அந்த தங்கத்தை எடுத்து வந்ததாக கூறினர். அவர்களிடம் கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.2.28 கோடி ஆகும். இவர்களிடம் தங்கத்தை கொடுத்த நபரை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.