லிங்குசாமியுடன் ராஜுசுந்தரம் மோதல். அஞ்சான் படப்பிடிப்பில் பரபரப்பு.

லிங்குசாமி இயக்கத்தில் ‘அஞ்சான்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படப்பிடிப்பில் ஏற்பட்ட ஒரு சிறு பிரச்சனையில் தற்போது சென்னை நடனக்கலைஞர்கள் சங்கம் லிங்குசாமி கடுமையான கோபத்தில் இருக்கிறது.

சூர்யா, சமந்தா மற்றும் 100 நடனக்கலைஞர்கள் கலந்துகொண்ட ஒரு பாடல்காட்சி மும்பையில் படமாக்கப்பட்டு இருந்தது. வெளிமாநிலத்தில் படப்பிடிப்பு நடத்தவேண்டும் என்றால் அந்தந்த மாநிலத்தில் இருக்கும் 30% கலைஞர்களை பயன்படுத்த வேண்டும் என்பது விதி. ஆனால் ராஜுசுந்தரம் சென்னையில் இருந்தே 100 நடனக்கலைஞர்களையும் அழைத்து வந்திருந்தார். இதனை அறிந்த மும்பை நடனக்குழு சங்கத்தினர் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்து பிரச்சனை செய்தனர்.

இதனால் படப்பிடிப்பு சுமார் 4 மணிநேரம் தடைபட்டது. பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் படக்குழுவுக்கு 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.  வேறு வழியில்லாமல் இயக்குனரும் தயாரிப்பாளருமான லிங்குசாமி அந்த அபராதத்தொகையை கட்டிவிட்டார். பின்னர் ஒருவழியாக பிரச்சனை முடிந்தது என்று நினைத்த நேரத்தில், அந்த அபராதத் தொகையை ராஜுசுந்தரத்தின் சம்பளத்தில் கழித்துவிட்டாராம். இதனால் ராஜுசுந்தரம் கடுப்பாகி சென்னை நடனக்கலைஞர்கள் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.

Leave a Reply