அதிமுக அமைச்சரவையில் நான்கு முறை அமைச்சராக இருந்த அரங்கநாயகம், கடந்த 2006ஆம் ஆண்டு கருணாநிதி முன்னிலையில் திமுகவில் சேர்ந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் திமுகவின் தேர்தல் பணிக்குழு செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று திடீரென திமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
நேற்று அரங்கநாயகம் விடுத்த ஒரு அறிக்கையில் இட ஒதுக்கீடு முறையில் திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் கருத்தில் தனக்கு முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக கட்சியில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளார். கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கும்போது வருமான உச்ச வரம்பு தேவையில்லை என்பது ஏழைகளுக்கு எதிரான கருத்து ஆகும் என்று கூறிய அரங்கநாயகம், மீண்டும் அதிமுகவிற்கோ அல்லது வேறு கட்சியிலோ சேரும் திட்டம் எதுவும் இல்லை என்றும் கூறிய அரங்கநாயகம், தான் இனி அரசியலில் இருந்து விலக இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஏற்கனவே அழகிரி, ஸ்டாலின் குழப்பத்தில் சிக்கியுள்ள திமுக, கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடால் அரங்கநாயகம் கட்சியை விட்டு விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.