இந்திய மண்ணில் முதன்முதலாக காலடி எடுத்து வைக்கிறது Toyoto நிறுவனத்தின் ETios Cross என்ற வகை புதிய கார். சமீபத்தில் டெல்லியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போ மூலம் இது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
லிவா, லிவா டிஆர்டி ஸ்போர்ட்டிவோ மாடல்களின் வரிசையில் தற்போது இந்த ETios Cross விற்பனைக்கு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களில் வெளிவந்திருக்கும் இந்த கார், இந்தியாவில் நல்ல விற்பனையை துவக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் முக்கிய அம்சங்களாக ஃபேப்ரிக்கில் உருவாக்கப்பட்ட இருக்கைகள், 2டின் தெளிவான ஆடியோ சிஸ்டம், லெதர் கவருடன் கூடிய ஸ்டீயரிங் வீல் ஆகியவை காரின் உள்ளே சிறப்பு அம்சங்களாக இருக்கின்றன. பியானோ கருப்பு நிறத்தில் கார் பளிச்சென ஃபினிஷிங் செய்யப்பட்டுள்ளது.
இன்ஃபெர்னோ ஆரஞ்ச், அல்ட்ராமரைன் புளூ, கிளாசிக் கிரே, சிம்பொனி சில்வர், செலஸ்டியல் பிளாக், வெள்ளை, வெர்மில்லியன் ரெட் மற்றும் ஹார்மோனி பீயேஜ் ஆகிய ஏழு நிறங்களில் ETios Cross கார் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.,
இதில் அமைந்துள்ள ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் வாடிக்கையாளர்களூக்கு நிரந்தர பாதுகாப்பு அளிக்கிறது. காரின் விலை விபரங்களை வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் Toyoto நிறுவனம் தெரிவிக்க இருக்கிறது. இந்த டெல்லி எக்ஸ்போவில் இந்த காரை வாங்க விரும்புவர்கள் முன்பதிவு செய்யலாம் என Toyoto நிறுவனம் அறிவித்துள்ளது.