இன்று இடைக்கால ரயில்வே பட்ஜெட். சலுகைகள் கிடைக்குமா?

பாராளுமன்றத்தில் இன்று இடைக்கால ரயில்வெ பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. விரைவில் வரவிருக்கும் தேர்தலை மனதில் வைத்து பல புதிய அதிரடி அறிவிப்புகள் மற்றும் சலுகைகள் வெளியிடப்படும் என தெரிகிறது.

வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்ற தேர்தல் வருவதை அடுத்து அதுவரை இடைக்கால ரயில்வே பட்ஜெட் ஒன்றை மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே இன்று தாக்கல் செய்ய உள்ளார். தேர்தல் முடிந்ததும் ஆட்சி அமைக்கும் புதிய அரசு முழுமையான ரயில்வே பட்ஜெட்டை வெளியிடும்.

இந்த பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் குறைப்பு இருக்காது என்றபோதிலும், பல புதிய திட்டங்கள் ,அறிவிப்புகள் ஆகியவைகள் மக்களை கவரும்படி இருக்கும் என ஆளுங்கட்சி சார்பில் கூறபடுகிறது.

இந்த நிதியாண்டில் இந்தியாவில் மேலும் 1500 கி.மீ நீளமுள்ள பாதையை மின்சார மயமாக்குவது குறித்து இந்த பட்ஜெட்டில் வெளியாகும் என உறுதியாக கூறப்படுகிறது.

Leave a Reply