இந்தியாவில் இது வரை வங்கிகளை உபயோகிப்பவர்கள் வெறும் முப்பது சதவீதம் தானாம். இதனால் கிராமப்புறங்கள், போக முடியாத இடங்கள் என்று எல்லாவற்றுக்கும் வங்கி சேவையை விரிவுப்படுத்த துவங்கியுள்ளது.
முதல் நடவடிக்கையாக சில புதிய நிறுவனங்களுக்கு வங்கி லைசென்ஸ் கொடுக்க ஆரம்பித்து உள்ளது. முத்தூட், மகிந்திரா, இந்திய அஞ்சல் துறை என்று பல புதிய வங்கிகள் விரைவில் உருவாக வாய்ப்புகள் உள்ளது.
90களில் HDFC, ICICI போன்று வங்கிகளுக்கு லைசென்ஸ் கொடுத்த பிறகு புதிய லைசென்ஸ்கள் அவ்வளவாக கொடுக்கப்படவில்லை. கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான புதிய வங்கிகள் வர இருக்கின்றன.
அடுத்து, அரசுத் துறை வங்கிகள் புதிய வேகத்தில் புது கிளைகளை திறந்து ஊரகப்புறங்களில் தமது வீச்சை விரிவாக்கி வருகின்றன. அதனால் தான் சிதம்பரம் அடிக்கடி கிராமப்புறங்களில் தெரிகிறார்.
இறுதியாக, இது வரை நாம் வங்கிகளில் பார்த்து வந்த ஒரு பெரிய வயதான வங்கி கூட்டம் ஓய்வு பெற இருக்கிறது. இந்த வெற்றிடத்தை நிரப்பவும் ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.
மேலே சொன்ன மூன்று நிகழ்வுகளும் அடுத்த பத்து வருடங்களில் இருபது லட்சம் வேலை வாய்ப்புகளை வங்கிகள் வழங்க இருப்பதாக தெரிகிறது.
இதனால் இளைஞர்கள் கல்லூரிப் படிப்பை தேர்ந்தெடுக்கும் போது பொறியியலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பொருளாதரத்துக்கும் கொடுங்க.. வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
பங்குச்சந்தை நீண்ட கால முதலீட்டார்களும் ஒரு நல்ல வங்கிப் பங்கை தேர்ந்தெடுத்து வச்சுக்குங்க..நல்ல பலன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.