இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால ரயில்வே பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாகவும், தமிழகத்திற்கு தேவையான அம்சங்கள் எதுவும் அதில் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் மீது ஏற்பட்டுள்ள விரக்தியால் மக்களவையில் பெரும் கூச்சலும் குழப்பமும் நடைபெறுவதாகவும், இது மத்திய அரசின் முழு தோல்வியை காட்டுவதாகவும் உள்ளது என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு தேவையான எந்த முக்கிய திட்டங்களும் ரயில்வே பட்ஜெட்டில் இல்லை என்று கூறிய அவர், தென்னிந்தியாவிற்கே இந்த பட்ஜெட் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
ரயில்வே கட்டணங்களை நிர்ணயிக்க ஆணையம் அமைக்கப்படும் என்று கூறியிருப்பது ரயில்வே கட்டணத்தை ஏற்றுவதற்கான ஒரு தந்திரமே என்றும் கூறியுள்ளார்.
இந்த ரயில்வே பட்ஜெட்டை மதிமுக செயலாளர் வைகோ மற்றும் பாமக நிறுவனர் ராம்தாஸ் ஆகியோரும் கண்டித்துள்ளர்