விஜயகாந்தின் தேமுதிக, பாரதிய ஜனதா கூட்டணியுடன் நடந்த பேச்சுவார்த்தையை முறித்துவிட்டு, தற்போது காங்கிரஸை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம் தொகுதிகளை ஒதுக்குவதில் ஏற்பட்ட சிக்கல்தான் என கூறப்படுகிறது.
பாஜக கூட்டணியில் தேமுதிகவுக்கு 15 தொகுதிகள் வேண்டும் என்றும், கூட்டணிக்கு தேமுதிக தான் தலைமை ஏற்கும் என்றும் தேர்தல் செலவுக்கு பாஜக மேலிடம்தான் முழு செலவும் செய்யவேண்டும் என்றும் தேமுதிக தரப்பில் இருந்து நிபந்தனை விதிக்கப்பட்டதாகவும், இதை பாஜக ஒப்புக்கொள்ளாததால்தான், விஜயகாந்தின் பாதை காங்கிரஸை நோக்கி செல்ல ஆரம்பித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
வரும் 14ஆம் தேதி பிரதமரை சந்திக்கும் விஜயகாந்த், அதன்பின்னர் ராகுல்காந்தியையும் சந்திப்பார் என கூறப்படுகிறது. காங்கிரஸ் கூட்டணியில் விஜயகாந்துக்கு 20 தொகுதிகள் வரை கொடுக்க காங்கிரஸ் சம்மதித்தனால்தான் பிரதமருடன் சந்திக்க விஜயகாந்த் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கூட்டணியில் திமுகவும் சேருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.