இளையராஜாவின் இளைய மகன் யுவன்ஷங்கர் ராஜா, சமீபத்தில் இஸ்லாம் மதத்துக்கு மாறியதாக டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இதற்கு ரசிகர்களிடம் இருந்து வந்த ஆதரவை விட கடுமையான எதிர்ப்புதான் அதிகம் வந்துள்ளது. இந்த எதிர்ப்புகளுக்கு பதில் சொல்ல விரும்பாத யுவன்ஷங்கர் ராஜா, டுவிட்டர் கணக்கை முடக்கிவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது யுவனின் அதிகாரபூர்வ டுவிட்டர் தளமான @Raja_Yuvan என்ற டுவிட்டர் கணக்கு இயங்கவில்லை.
யுவன்ஷங்கர் ராஜா பல வருடங்களாக டுவிட்டரை பயன்படுத்தி வந்துள்ளார். அவர் இசையமைக்கும் படங்கள், கலந்து கொள்ள இருக்கும் விழாக்கள் போன்ற விபரங்களை உடனுக்குடன் டுவிட்டரில் பதிவு செய்யும் பழக்கம் உடையவர் என்றும் மதமாற்ற பிரச்சனை காரணமாக தற்காலிகமாக அவர் டுவிட்டரில் இருந்து விலகியுள்ளதாகவும், இந்த பிரச்சனை சற்று ஆறியபிறகு மீண்டும் டுவிட்டருக்கு யுவன் வருவார் என்றும் கூறப்படுகிறது